தரமான அப்டேட் கொடுத்த இயக்குநர் பிரஷாந்த் நீல்.. கே.ஜி.எப் 3 வருமா ?

 
1

 கன்னட சினிமாவை சத்தமின்றி தூக்கிய நிறுத்திய KGF திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது .

பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது . அதேபோல் கடந்த 2022ம் ஆண்டு வெளியான KGF படத்தின் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் திரையுலகை அலறவிட்டது .

இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களுக்கும் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்ததால், மூன்றாம் பாகம் எப்போது தயாராகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது .

இந்நிலையில், இயக்குனர் பிரஷாந்த் நீல் இப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தற்போது பேசியுள்ளார். அதன்படி KGF 3 படம் நிச்சயம் நடக்கும். அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் ஏற்கனவே முடிந்துவிட்டது . அனைத்தையும் திட்டமிட்டு கே.ஜி.எப் 3 படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என தெரிவித்துள்ளார்.

From Around the web