எனது தந்தை எழுதிய ஆர்எஸ்எஸ் கதையை படித்தபோது அழுதுவிட்டேன் - இயக்குனர் ராஜமௌலி
தென்னிந்தியாவில் பிரபல கதையாசிரியராக இருப்பவர் விஜயேந்திர பிரசாத். பிரபல இயக்குனர் ராஜமௌலியின் தந்தையான அவர், பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதியுள்ளார். அந்த வகையில் தற்போது ஆர்எஸ்எஸ் குறித்து கதை ஒன்றை எழுதியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ராஜமௌலியிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து எனக்கு தெரியாது. அந்த அமைப்பை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அது எப்படி உருவானது, அந்த அமைப்பின் நம்பிக்கை என்ன, எப்படி வளர்ச்சியடைந்தது குறித்து எனக்கு தெரியாது.
ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டை வாசித்தபோது எமோஷனாகி ஆனேன். அந்த ஸ்கிரிப்ட்டை பலமுறை படித்தபோது அழுதுவிட்டேன். அந்த கிரிப்ட் சிறப்பாகவும், எமோஷனலாகவும் இருக்கிறது. அந்த கதை நான் இயக்குவேனா, அல்லது வேறு யாராவது இயக்குவார்களா என தெரியவில்லை. அப்படி எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த கதையை இயக்குவதில் பெருமைப்படுவேன். அது ஒரு அழகான உணர்ச்சிகரமான படம் என்று கூறினார்.