தேசிய விருது வென்ற இயக்குநருடன் கைக்கோர்க்கும் அஜித்..!

 
அஜித் குமார்

வலிமை படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குப் போகும் இயக்குநர் குறித்த தகவல்கள் வெளியாகி கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் இரண்டாவது முறையாக அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. நேர்கொண்ட பார்வைக்கு பிறகு இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். பல்வேறுகட்ட எதிர்பார்ப்புக்கு பிறகு படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் கோலிவுட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லையில்லாத அளவுக்கு வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சமூகவலைதளத்தில் ஒரு வரலாற்றையே படைத்தது.

இந்த படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தை மீண்டும் ஹெச். வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல அந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கவுள்ளார். இந்த தகவலை ஏற்கனவே அவர் உறுதி செய்துவிட்டார்.

இப்போது அந்த படத்தை தொடர்ந்து அஜித் 62-வது படம் தொடர்பான தகவல் பரவி வருகிறது. அஜித் நடிக்கும் 62-வது படத்தை பிரபல இயக்குநரும் தேசிய விருது வென்றவருமான தியாகராஜா குமாரராஜா  இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என இரண்டு படங்கள் மூலம் தேசியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் தியாகராஜா குமாரராஜா. இந்த இரண்டு படங்களுமே ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்தது. தற்போது இவர் அஜித் குமார் நடிக்கும் படத்தை இயக்குவது கோலிவுட் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
 

From Around the web