வலைப்பேச்சு பிஸ்மிக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமி..!

 
1

வலைப்பேச்சு பிஸ்மி கொடுத்த பேட்டியில், “வருடத்தில் கிட்டதட்ட 200 படங்கள் வெளியாகிறது. அதில் பல படங்கள் மனதை தொட்டு சொல்ல வேண்டும் என்றால் குப்பை தான். இல்லை டிஜிட்டல் குப்பை என்று கூட சொல்லாம். இந்த மாதிரி சொல்லும் போது சினு ராமசாமி படங்கள் சிறந்த படங்கள் தான். சிறந்த படம் என சொல்வதில் சிலருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நிச்சயமாக சமூக நல்லிணகத்திற்கான படம்.

இந்த மாதிரியான படங்களுக்கு வணிக ரீதியாக வெற்றி கிடைக்காது. ஆனால் சீனு ராமசாமி என்ன செய்வார் என்றால் படம் ரிசல்ட் தெரிந்த பிறகும் அந்த படம் இங்க, அங்க விருது வாங்கியதாக செய்தி அனுப்புவார். ட்விட்டரிலும் ஷேர் செய்து கொண்டே இருப்பார். இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்து என் நண்பர் சொன்னார், இவர் செத்த பிணத்திற்கு மேக்கப் போட்டு கொண்டே இருப்பர் என சொன்னார். அது என் மனதில் நின்றுவிட்டது” என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனு ராமசாமி, “தியேட்டரில் வசூல் குறைவு தான் பிஸ்மி ஆனால் மாமனிதன் ஆகா ஓடிடியில் வெற்றி செத்த பொணத்தை எதுக்குப்பா மாஸ்க்கோ 45 வது திரைப்பட விழாவில் உலக நாடுகல்ல திரையி டுறாங்க நா பதிவிடுவது உனக்கோ உசிரு இல்லைன்னு சொன்ன ஆளுக்கோ இல்லடா நீ செத்த பிறகு வரும் என் இளைய தலைமுறைக்கு அதுசரி ஒரு கோடி வருமானம் காட்டி income tax கட்டிட்டேயேபா கெட்டிக்காரன் தான்.


 

From Around the web