தன் 2 படங்களின் அப்டேட்டையும் ஒன்றாக அறிவித்த ஷங்கர்..!!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டு படங்கள் தொடர்பான அப்டேட்டுகளையும் ஒன்றாக வெளிவந்துள்ளது. 
 
shankar

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவர் தற்போது தெலுங்கில் ‘கேம் சேஞர்’ மற்றும் தமிழில் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். ஒரே நேரத்தில் ஷங்கர் 2 படங்களை இயக்குவது இதுவே முதல்முறை. 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கேம் சேஞ்சர்’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிந்து விட்டது. கிளைமாக்ஸ் காட்சிகள் அபாரமாக வந்துள்ளது. இனி அடுத்ததாக ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். அந்த படத்தின் சில்வர் புல்லட் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று அந்த ட்வீட்டில் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். 


படத்தை எதிர்பார்த்துவ் அரும் ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை அளித்துள்ளது. தெலுங்கில் தயாராகி வரும் கேம் சேஞர் படத்தில் ராம்சரண் தேஜா, கைரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு இப்படம் வெளிவருகிறது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராமன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web