கல்யாண விஷயத்துல நடிகை அதிதிக்கு கண்டிஷன் டைரக்டர் ஷங்கர்..!
விருமன் படத்தின்மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார் நடிகை அதிதி ஷங்கர். முதல் படத்திலேயே கார்த்தி ஜோடியாக முத்தையா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு சிறப்பாக அமைந்தது. கிராமத்து கெட்டப்பில் நடித்திருந்த அதிதிக்கு இந்தப் படம் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின்மூலம் பாடகியாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். மதுரை வீரன் என்று துவங்கும் பாடலை இவர் பாடியுள்ளார் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவீரன் படம் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் படம் 89 கோடி ரூபாய்களை இதுவரை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலும் அதிதி வண்ணாரப்பேட்டையில என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியுள்ளார். படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை மிகவும் இயல்பாக செய்து முடித்திருந்தார் அதிதி. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பியுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து இரு படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.
தெலுங்கில் இவர் அடுததடுத்து இரண்டு பாடல்களை பாடியுள்ளார். விரைவில் தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைவார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே கடந்த சில தினங்களாக அதிதியின் திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதிதியின் திருமணம் குறித்து அவரிடம் அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான ஷங்கர் கண்டீஷன் போட்டுள்ளதாகவும் இன்னும் இரு ஆண்டுகளில் எவ்வளவு படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளலாம் என்றும் அதன்பிறகு திருமணம் செய்துக் கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து அதிதி ஷங்கர் தற்போது பேசியுள்ளார். தான் உற்சாகமாக இருப்பதாகவும் தன்னுடைய மாப்பிள்ளை குறித்து தனக்கு தெரிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் அதிதி ஷங்கர். இவரது அடுத்தடுத்த சிறப்பான போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தற்போது இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை விரைவில் மில்லியனை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதவிதமாக வித்தியாசமாக இவர் அடுததடுத்த கெட்டப்புகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.