கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குநர் ஷங்கர் மகள்- பிரமாண்டமாக நடக்கும் திருமணம்..!

 
இயக்குநர் ஷங்கர் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா - மணமகன் ரோஹித்

புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்துக்கும் இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நாளை மறுநாள் திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான ஐஸ்வர்யா, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்தை கரம் பிடிக்கவுள்ளார்.

இவர்களுடைய திருமணம் சென்னைக்கு அடுத்துள்ள கடற்கரை ரிசார்ட்டில் தமிழ் முறைப்படி நடைபெறுகிறது. திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்ட அரங்குகள் அமைத்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரி அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித், அந்த தொடரில் அதிகபட்சமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்திருந்தார். 29 வயதாகும் ரோகித், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web