ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற இயக்குநர் ஷங்கர் மகள்..!

 
ரஜினிகாந்த் மற்றும் அதிதி ஷங்கர்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றார்.

தென்னிந்தியளவில் கொண்டாடப்படும் இயக்குநராக இருப்பவர் ஷங்கர். இவருடைய இளைய மகள் அதிதி ‘விருமன்’ படம் மூலம் கதாநாயகியா அறிமுகமாகிறார். 

நடிகர்கள் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். மருது, கொம்பன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான முத்தையா இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்துக்கான பூஜை சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் அதிதியை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் சந்தித்து ஆசி பெற்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அதிதி தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் பலரும் அதிதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

From Around the web