கோலாகலமாக நடந்த இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்- முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!

 
மணமக்களை வாழ்த்திய மு.க. ஸ்டாலின்

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா மற்றும் ரோகித் திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் டி.என்.பி.எல் மதுரை பாந்தர்ஸ் அணியின் உரிமையாளரின் மகன் ரோஹித் இருவருக்கும் சென்னை அருகே திருமணம் நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகளை விதிகளை பின்பற்றி மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவருடன் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம். சுப்பிரமணியன் ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களுக்கும், திருமண வீட்டாருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ரிசார்டில் மிகவும் எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

From Around the web