இயக்குநர் ஷங்கரின் தாயார் காலமானார்- திரைத்துறையினர் இரங்கல்..!

 
இயக்குநர் ஷங்கரின் தாயார் காலமானார்- திரைத்துறையினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.

தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் இந்தியளவில் முன்னணி இயக்குநராக விளங்குபவர் ஷங்கர். இவருடைய தாயார் முத்துலட்சுமி, தி. நகரிலுள்ள ஷங்கரின் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு உடல்நலனில் பிரச்னை ஏற்பட்டது. அதற்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

மறைந்த முத்துலட்சுமியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளது. ஷங்கருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web