நம்மை விட்டு பிரிந்தாலும் இந்த படங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் சித்திக்..!

 
1

கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவுக் காரணமாக திரைப்பட இயக்குநர் சித்திக் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக, நேற்று (ஆகஸ்ட் 08) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 63.

கடந்த 1960- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1- ஆம் தேதி கேரளா மாநிலம், கொச்சியில் பிறந்த சித்திக், மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.1989-ம் ஆண்டு வெளியான ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சித்திக். அதனைத் தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களை இயக்கியுள்ளார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குநராகவும் மாறினார். தமிழில் பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்டத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் சித்திக் இயக்கிய ‘Bodyguard’ படம் தமிழில் காவலன், இந்தியில் ‘Bodyguard’ பெயரிலேயே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web