பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா தம்பி நடிகர் பாலா கைது..!

 
1

பிரபல தமிழ் டைரக்டர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா. தமிழில் கலிங்கா, வீரம் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். மலையாளத்தில் களபம், புதிய முகம், புலி முருகன், முசாபிர், லூசிபர் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் பாலா கைது... திரைத்துறையில் பரபரப்பு!

2010ம் ஆண்டு பிரபல மலையாள பாடகியான அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு அமிர்தா சுரேஷை பாலா விவாகரத்து செய்தார். அதன் பிறகு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு எலிசபெத்தை 2வது திருமணம் செய்தார். பின்னர் அவரையும் பாலா பிரிந்து விட்டார்.

இந்நிலையில் தனக்கும், மகளுக்கும் எதிராக பாலா சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பவதாக அமிர்தா சுரேஷ் கொச்சி போலீசில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து  இன்று அதிகாலை கடவந்திரா போலீஸ் நடிகர் பாலாவை கொச்சியில் உள்ள அவரது வீட்டில்  கைது செய்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web