”சூர்யா 40 பட தலைப்பு மாஸாக இருக்கும்” பிறந்தநாளில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிப்பு..!

 
இயக்குநர் பாண்டிராஜ்

நடிகர் சூர்யா நடித்து வரும் அவருடைய 40-வது படம் குறித்த முக்கிய அப்டேட்டை தன்னுடைய பிறந்தநாளில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ப்ரியங்கா அருள்மோகன் மற்றும் திவ்யா துரைசாமி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை காரணமாக இதனுடைய படப்பிடிப்பு பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம், சூர்யா உள்ளிட்ட சூர்யா 40 படக்குழுவினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரசிகர்கள் பலரும் அவரிடம் சூர்யா 40 படம் குறித்த அப்டேட்டை கேட்டு நச்சரித்துவிட்டனர். இதை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அன்பான ரசிகர்களே, சூர்யா 40 படம் எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிஞ்சதும் துவங்கும். எங்கள் படக்குழ் தயராக உள்ளது. படத்தின் தலைப்பும் மாஸாக இருக்கும். ஜூலை வரை நேரம் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன் என்று ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web