இயக்குநர் வெங்கட் பிரபு கைது..?
2007-ல் வெளியான ‘சென்னை 28’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதனைத் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில யூடியூப் சேனல்களில் திடீரென ஒரு தகவல் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சற்றே விசாரித்துப் பார்த்ததில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி நடிப்பில் கஸ்டடி எனும் படம் உருவாகி வருகிறது. விரைவில் அந்த படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கான ப்ரோமோஷன் ஸ்டன்ட்டாக இது இருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எல்லாத்தையும் வித்தியாசமாக செய்யும் வெங்கட் பிரபு இந்த விஷயத்தில் இப்படியொரு வெடிகுண்டு ப்ரோமோஷன் உடன் வந்துள்ளார். சமீபத்தில், வெளியான கஸ்டடி படத்தின் டீசரும் மிரட்டலாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில், படம் அடுத்த மாநாடாக தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.