இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் டீசர் வெளியானது!
இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் ஹிட்லிஸ்ட். இந்தப் படத்தில் விஜய் கனிஷ்காவுடன் இணைந்து சரத்குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, முனிஷ்காந்த், ஐஸ்வர்யா தாத்தா, சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, பால சரவணன், அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்தப் படத்தை கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சூரியக்கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
ஆர் கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்ய சி சத்யா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.