பேங் கொடுக்கும் வட்டியில் தான் குடும்பத்தை கவனித்துக் கொண்டேன் - டிஸ்கோ சாந்தி உருக்கம்..!

தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்த டிஸ்கோ சாந்தி அவருடைய கணவரின் மறைவுக்குப் பின்னர் சந்தித்த கஷ்டங்கள் ஏராளம். அதேபோல அவர் தனது கணவர் மீதும் குடும்பத்தினர் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.
சாந்தியின் கணவர் இறந்த பிறகு தான் குடிக்கு அடிமையாக இருந்ததாகவும் வாழவே பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் படுத்தால் தூக்கம் வராது இதனால் தினமும் குடித்து விட்டு தான் தூங்குவேன். அவர் உயிரோடு இல்லாததை தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இன்றி தனது கணவர் இறந்த போது அவருடைய வங்கிக் கணக்கில் 15 லட்சம் தான் இருந்தது. அது என் வீட்டு செலவுக்கு, வேலை ஆட்களுக்கு கொடுப்பதற்கு சரியாக இருந்தது. இதனால் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன்.
எனது கஷ்டத்தின் பொருட்டு இரண்டு, மூன்று இடத்தை கூட விற்று விட்டேன். அப்படி இடத்தை விற்று தான் எனது குழந்தைகளை காப்பாற்றினேன். நாங்கள் கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்தோம் அதனால் இடத்தை விற்ற பணத்தை பேங்கில் போட்டு அந்த வட்டி பணத்தில் தான் குடும்பத்தை கவனித்துக் கொண்டேன் என்று டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார்.