பிக் பாஸில் பாரபட்சம்.. ரவீந்தர் விளக்கம்..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதத்தோடு முடிவுக்கு வந்தது. ஆனாலும் நிகழ்ச்சி முடிவடைந்து சில வாரங்களுக்கு பிறகும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு இணையத்தில் இருந்து கொண்டே இருக்கிறது இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அடிக்கடி பேட்டிகளில் கலந்துகொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் பிக் பாஸ் போட்டியாளரும் ரிவ்யூவருமான ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், நான் இதற்கு முன்பு எத்தனையோ சீசன்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் அதில் எல்லாம் நடக்காத பல விஷயம் இந்த சீசனில் நடந்தது. இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் ஒரு சில போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் கூட அதை அவர்கள் முன்பு நேரடியாக சொல்ல மாட்டார்கள்.
ஆனால் இந்த சீசனில் மட்டும் விஜய் சேதுபதி உள்ளிருக்கும் போட்டியாளர்கள் சரியாக விளையாட முடியவில்லை என்றால் அவர்களிடம் அதை சொல்லி உன்னால் எதுவும் செய்ய முடியாது என்பது போல அவர்களின் மனதை குழப்பி விட்டார். அதுபோல உள்ளிருந்த போட்டியாளர்கள் சிலரிடம் விஜய் சேதுபதி பாரபட்சம் காட்டினார்.
ராணவ்விடம் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து ராணவ் என்னிடம் வருத்தப்பட்டான். நான்கு விஷயத்தை என்னிடம் சொல்லி இருந்தான். அதிலும் பைனல் நாளில் விஜய் சேதுபதி சொன்னதை கேட்டு ராணவ் அழுதுவிட்டார். அதாவது பைனல் மேடையில் விஜய் சேதுபதி நிற்கும்போது அங்கு முன்னால் போட்டியாளர்கள் எல்லோரும் உட்கார்ந்து இருந்தோம். அப்போது ராணவிடம் விஜய் சேதுபதி பேசிக் கொண்டிருந்தார். நீ அழகா இருக்க ராணவ், பியூச்சர்ல கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருக்கு. அப்படி நீ நடிக்கிற படத்துல எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தா.... கண்டிப்பா அதுல நான் நடிக்க மாட்டேன் எனக்கு சினிமாவே வேண்டான்னு தூக்கி போட்டுட்டு போயிடுவேன் என்று சிரித்தபடியே சொல்லி இருந்தார். அதற்கு ராணவ் அந்த இடத்தில் சிரித்து இருந்தார்.
ஆனால் அது என்னை ரொம்ப கஷ்டப்படுத்தியது என்று என்னிடம் சொன்னார். அதற்கு நான் விஜய் சேதுபதி அந்த விஷயம் சொன்னது தப்பா சொல்றது போல தெரியல ஏதோ காமெடிக்கு சொன்னது போல தான் இருந்தது என்று சொன்னேன். அதற்கு ராணவ் நானும் அதை காமெடியாக எடுத்துக் கொண்டேன் ஆனால் என்னோடு இருந்தவர்கள் அதை என்னிடம் சொல்லி குத்தி காட்டி பேசினார்கள். அது எனக்கு ரொம்ப வலியை ஏற்படுத்தியது என்று சொன்னான். அதுபோல விஜய் சேதுபதி அப்படி பேசியது ராணவ் குடும்பத்தினருக்கும் வருத்தம் கொடுத்தது அவர்களும் கஷ்டப்பட்டாங்க என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசி இருக்கிறார். இதை ராணவ் ரசிகர்கள் பகிர்ந்து விஜய் சேதுபதியை திட்டி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து சில வாரங்கள் கடந்துவிட்ட பிறகு இவர்கள் பஞ்சாயத்து இணையத்தில் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக தான் ராணவ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இவருக்கு எதுவும் தெரியவில்லை, இவரால் சரியாக பேச முடியவில்லை, எந்த விஷயம் சொன்னாலும் புரியவில்லை என்று சில போட்டியாளர்கள் ராணவ் முகத்துக்கு நேராகவே சொல்லி இருந்தார்கள். அதை பல இடங்களில் விஜய் சேதுபதியின் சரி என்பது போல பேசி இருந்தார்.
இதனால் ராணவ்க்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். ராணவை விஜய் சேதுபதி அசிங்கப்படுத்துகிறார், வேண்டுமென்றே ராணவை பேசவிடாமல் தடுக்கிறார் என்பது போன்று கமெண்டுகள் கொடுத்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதி போடும் பதிவுகளுக்கு கூட ராணவ்க்கு சப்போர்ட் செய்து அதிகமான கமெண்ட்கள் கொடுத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.