மீண்டும்  ‘மரக்காயர்: அரபிக்கடலிண்ட சிங்கம்’ ரிலீஸ் தேதி மாற்றம்- அதிருப்தியில் ரசிகர்கள்..!

 
மீண்டும் ‘மரக்காயர்: அரபிக்கடலிண்ட சிங்கம்’ ரிலீஸ் தேதி மாற்றம்- அதிருப்தியில் ரசிகர்கள்..!

பல்வேறு தேசிய விருதுகளை குவித்த ’மரக்காயர்: அரபிக்கடலிண்ட சிங்கம்’ படம் ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்படவிருந்த நிலையில், தற்போது அதனுடைய வெளியீடு மேலும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஓராண்டுக்கு முன்பே தயாரான படம் ‘மரக்காயர்: அரபிக்கடலிண்ட சிங்கம்’. மலையாளம் மற்றும் தமிழில் நேரடியாகவும் இந்தி மற்ற்ம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்த படம் தயாராகியுள்ளது.

திரையரங்குகளில் வருவதற்கு முன்னதாகவே 2019-ம் ஆண்டின் சிறந்த படமாக  ‘மரக்காயர்: அரபிக்கடலிண்ட சிங்கம்’ தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. மேலும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்டஸ் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளிலும் இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

சுமார் 16-ம் நூற்றாண்டு காலத்தின் முன்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சுனில் ஷெட்டி, கீர்த்தி சுரேஷ், அர்ஜுன் சார்ஜா, சுஹாசினி, பிரபு, சித்திக், நெடுமுடி வேணு, இன்னசெண்ட், முகேஷ், ப்ரணவ் மோகன்லால், கல்யாணி ப்ரியதர்ஷண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச்சில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னையால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டது. தற்போது இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் நிலை பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் வரும் ஆகஸ்டு 12-ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. 

From Around the web