அடுத்தடுத்து நடிகைகள் விவாகரத்து ? ஐஸ்வர்யா, சைந்தவி தொடர்ந்து தற்போது நமீதா..!

 
1
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சைந்தவி விவாகரத்தை அடுத்து தற்போது நமீதாவும் விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் தெலுங்கு ஊடகங்களிலும் நமீதா தனது கணவர் வீரேந்திர சவுத்ரியை விவாகரத்து செய்யப் போவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நமீதா திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது

இந்த நிலையில் விவாகரத்து குறித்து பரவி வரும் வதந்தி குறித்து நமீதா கூறுகையில் ’எங்களை பற்றி இப்படி ஒரு வதந்தி பரவி வருவது சில நாட்களுக்கு முன் தான் எனக்கு தெரிய வந்தது, இதனை அடுத்து தான் நான் என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன், அப்படியும் இந்த விவாகரத்து வதந்தி நிற்பது போல் தெரியவில்லை.
 
ஆனால் சினிமாவில் நடிகையான பிறகு ஏராளமான வதந்திகளை நான் பார்த்து விட்டதால் இதை ஒரு பொருட்டாக நான் எடுத்துக் கொள்ளவில்லை, எனது கணவரும் இதை பற்றி கவலைப்படவில்லை, வதந்தி செய்திகளை பார்த்து நாங்கள் சிரித்துக்கொண்டோம்’ என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து நமீதா தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான செய்திகள் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

From Around the web