பொன்னியின் செல்வன் படத்தில் டீ.ஜே..!

 
டீ.ஜே. அருணாச்சலம்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகரும் பாடகருமான டீ.ஜே அருணாச்சலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

அதன்படி இந்த காட்சிகளில் டீ.ஜே. அருணாச்சலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் படத்தில் இளம் ஆதித்த கரிகாலராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த காட்சிகளுக்கான படப்பிடிப்புடன் சில பேட்ச்-அப் காட்சிகளுக்கான ஷூட்டிங்கும் நடந்து வருகிறது. அதன் காரணமாக பொன்னியின் செல்வன் பேட்ச்-அப் ஷூட்டிங் மேலும் 10 நாட்களுக்கு நடக்கவுள்ளது.
 

From Around the web