அவரை கூப்பிட்ட திமுக, என்னை கூப்பிடலையே.. வருத்தத்தில் கமல்ஹாசன்..!

 
1

கருணாநிதியின் புனரமைக்கப்பட்ட நினைவிடம் திறப்பு விழா நடந்த போது அதில் திரை உலகம் சார்பில் ரஜினிகாந்த் மற்றும் வைரமுத்து ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டனர்திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாக கருதப்படும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் கூட இந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றால் கமல்ஹாசன்  ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் சொல்லலாம் என்ற நிலையில் ரஜினிகாந்த்துக்கு மட்டும் அழைப்பு விடுத்து கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படாததை தமிழக அரசியலும் கோலிவுட் திரை உலகமும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றன.

குறிப்பாக சமீபத்தில் தான் ராமர் கோவிலுக்கு சென்று வந்த ரஜினிகாந்த்கருணாநிதி நினைவிடத்தில் கி வீரமணி உடன் பேசிக்கொண்டிருந்ததை பார்க்கும்போது பலர் ஆச்சரியப்பட்டனர் என்பதும் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினரிடம் நெருக்கமாக இருந்து வருவதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 
ஆனால் கமல்ஹாசன் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும் அவருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுக்கவில்லை என்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறதுஏற்கனவே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைக்கு தன்னை அழைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கும் கமல்ஹாசனுக்கு தற்போது கருணாநிதி நினைவிட திறப்பு விழாவுக்கும் தன்னை அழைக்கவில்லை என்பது கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் சில அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

From Around the web