இப்படி கூட பரப்புவீங்களா..? திருமணமான ஒரே மாதத்தில் டைவர்ஸ்..!  

 
1

கடந்த மாதம் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் நடைபெற்றது. மேலும் இந்திரஜா தனது தாய்மாமன் ஆகிய கார்த்திகை தான் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் மிகவும் ஆடம்பரமாகவும், பெரிய அளவிலும் நடத்தப்பட்டது. மேலும் திருமணத்தில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில் எடுக்கும் புகைப்படங்களையும் இதானது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வந்த ரோபோ சங்கர் மற்றும் அவரின் குடும்பத்தார்கள் திருமணம் குறித்து பல மகிழ்ச்சியான செய்திகளை பதிவிட்டு வந்தனர். மேலும் மெஹந்தி போன்ற நிகழ்ச்சிகளையும் வடமாநிலங்களில் நடத்தப்படும் திருமண நிகழ்ச்சிகளை போன்று இவர்களும் செய்து வந்தனர். இன்று வெளிநாட்டில் உள்ளவர்கள் கூட தமிழ் முறைப்படி திருமணம் செய்து வரும் நிலையில், தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் இவர் இப்படி பிற மாநில முறைப்படி திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இன்று டாப் நடிகர் மற்றும் நடிகைகளாக இருக்கும் பிரபலங்கள் கூட தங்களின் திருமணத்தை எளிய முறையில் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில படங்களை மட்டும் நடித்து வந்த இந்திரஜா அவரின் திருமணத்தை இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடி வருவதை வைத்து பல ட்ரோல்களை நெட்டிசன்கள் செய்து இணையத்தில் பரப்பி வந்தனர். இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த போது மட்டுமல்லாமல் இந்திரஜா தனது தந்தையான ரோபோ சங்கருக்கு லிப் கிஸ் கொடுத்த படியும், மேலும் இந்திரஜாவின் அம்மா மருமகனான கார்த்திக்கு முத்தம் கொடுக்கப்பட்டதாகவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திரஜா மற்றும் கார்த்திக் இருக்கு திருமணமாகி ஒரே மாதமான நிலையில் அதற்குள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக தற்போது சமூக வலைத்தளங்களிலும் youtube போன்ற சேனல்களிலும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையாகவே இவர்கள் விவாகரத்து செய்ய போவதாக எந்தவித அதிகாரப்பூர்வமான ஒரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும் அவர்கள் இருவரும் கூட இது குறித்து எந்த தகவலும் கூறாத நிலையில்  விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி தீயாக இணையதளங்களில் பரவி வந்தது. இதனை கேட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ரோபோ சங்கர் மற்றும் அவரின் குடும்பத்தார்கள் இந்த செய்தி பரவுவதை நிறுத்த வேண்டும் என்று எண்ணினார்கள். இந்த நிலையில் தற்போது இந்திரஜா இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்!! அவர் கூறி இருப்பது என்னவென்றால்....இப்போது சமூக வலைத்தளங்களிலும், youtube சேனல்களிலும் எனக்கும் எனது கணவருக்கும் விவாகரத்து நடக்கப் போவதாக பல செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தியாகவே இருந்து வருகிறது. 

திருமணமான ஒரே மாதத்தில் இப்படிப்பட்ட செய்திகள் நெட்டிசல்களால் பரப்பப்பட்டு வருவது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இது குறித்த செய்திகள் எனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் மனரீதியாக  மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் நொந்து போய் உள்ளனர் என்று மனம் வருந்தி இந்திரஜா  கூறியுள்ளார்.  இதைத் தொடர்ந்து இவர்களின் விவாகரத்து தொடர்பான செய்திகள் முற்றிலும் வதந்தி என்று இதன் மூலம் தெரிய வருகிறது. இது போன்று எந்த ஒரு ஆதாரப்பூர்வமான தகவலும் இல்லாமல் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பல தரப்பில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர். தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி விடுகிறது.

From Around the web