வெற்றிமாறன் இயக்கும் பயோகிராஃபி படம்- யாரை பற்றியது தெரியுமா..? 

 
வெற்றிமாறன்

பிரபல ஊடகத்துக்கு அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய அடுத்த படத்துக்கான திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

அசுரன் படத்துக்கு பிறகு வெற்றிமாறன் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

இந்த படத்துக்கு பிறகு சூர்யாவுடன் வாடிவாசல், கென் கருணாஸ் நடிக்கும் ‘ராஜன் வகையரா’ வெப் தொடர், ஜீ5 ஓ.டி.டி தளத்துக்காக வேறொரு வெப் தொடர், விஜய்யுடன் புதிய படம் என நிறைய ப்ராஜக்ட்டுகளை தன் கைவசம் அவர் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் தனது அடுத்த படம் குறித்து அவர் பேசியுள்ளார். அதன்படி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் வாழ்க்கையை படமாக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு படங்கள் மற்றும் வெப் சிரீஸுகளை தன்னுடைய கையில் வைத்திருக்கும் வெற்றிமாறன், இந்த படத்தை எப்போது உருவாக்குவார் என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

From Around the web