எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் இயக்கிய இரண்டு படங்கள் பற்றி தெரியுமா ?
Jul 28, 2023, 06:05 IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வருகிறார் மாரிமுத்து.
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் இவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. எதார்த்தமான நடிப்பை கொடுத்து சீரியலுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வரும் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் சில படங்களை இயக்கி உள்ளார்.
மணிரத்தினம், சீமான், வசந்த பாலன் மற்றும் எஸ் கே சூர்யா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து தமிழ் சினிமாவில் வெளியான கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. ஆனால் நடிகராக ஜெயித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்துள்ளார் மாரிமுத்து.