தமிழில் முதன்முதலாக பாடல் பாடிய துல்கர் சல்மான்- எந்த படத்திற்கு தெரியுமா..?

 
தமிழில் முதன்முதலாக பாடல் பாடிய துல்கர் சல்மான்- எந்த படத்திற்கு தெரியுமா..?

மலையாளத்தின் முன்னணி நடிகராக இருந்தபோதிலும் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நடிகர் துல்கர் சல்மான் தற்போது ‘ஹே சினாமிகா’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் தமிழில் நடித்து வரும் படம் ‘ஹே சினாமிகா’. இதில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

மலையாளத்தில் பல்வேறு படங்களில் துல்கர் சல்மான் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்துள்ளார். அவர் பாடிய ஒரு சில பாடல்களும் தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழில் முதன்முதலாக பாடியுள்ளது குறித்து பேசிய துல்கர் சல்மான், இப்படிப்பட்ட பாடலை பாடுவதற்கு நான் நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழில் துல்கர் சல்மான் பாடிய முதன் பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசயமைத்துள்ளார். இந்த பாடல் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.  

From Around the web