அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றதும் முதல் வாழ்த்து வந்தது யாரிடம் இருந்து தெரியுமா ? சுரேஷ் சந்திரா ஓபன் டாக்..!

2025ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலில் அஜித்திற்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருவதால் அவரது சினிமாப் பயணத்தை பாராட்டி பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றதும், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டதும் திரைத்துறை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் இவை எதற்கும் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து வந்தனர். நெட்டிசன்கள் பலரும் சினிமாவில் விஜய்க்கு போட்டியாளர் அஜித் என்பதால் அவருக்கு வாழ்த்த மனதில்லை என கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த விவகாரத்தில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனியார் ஊடகத்தில் உண்மையை தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், கொஞ்சமும் ஆதாரமில்லாத தகவல் எனவும், அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றதும் விஜய் சாரிடம் இருந்து தான் முதல் வாழ்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் சாருக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கும் விஜய் சார் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அஜித், விஜய் இருவருக்கும் ஆத்மார்த்தமான நட்பு உள்ளது, எனவே விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பதில் துளியும் உண்மை இல்லை என கூறியுள்ளார்.
இதனையடுத்து சமூக வலைதளத்தில் எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொண்ட ரசிகர்கள் தற்போது ஒற்றுமையாக வலம் வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த வாரம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.