கரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகா தற்போது எப்படி இருக்காங்க தெரியுமா ?

 
11

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிகை கனகாவை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது.அந்த படத்தை தொடர்ந்து அவர் எதிர்காற்று, அதிசய பிறவி இப்படி பல படங்களில் நடித்து வந்தார்.  கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் எட்டுக்கும் மேற்பட்ட ஹிட்டான திரைப்படங்களை கொடுத்த நடிகை கனகா தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மலையாள திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மலையாளத்தில் இவர் காட்பாதர் என்கிற திரைப்படத்தின் மூலமாக மலையாள ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்.

ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகை கனகா சுமார் 30 வருடங்களாகவே காணாமல் போய்விட்டார்.

இந்த நிலையில் தான் இவரைப் பற்றி பல்வேறு பொய்யான தகவல்கள் பரவி வந்தது. இவருக்கு கேன்சர் அதனால் இறந்து விட்டார் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் அதனை பொய் என்று சொல்லும் விதமாக கடந்த வருடம் இவர் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

தற்போது நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் 

1

From Around the web