மைனா படத்திற்குள் அமலா பால் எப்படி வந்தார் தெரியுமா..? 

 
மைனா படத்திற்குள் அமலா பால் எப்படி வந்தார் தெரியுமா..?

கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்த படம் ‘மைனா’. இந்த படத்தில் நடித்ததற்காக தம்பி ராமைய்யாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

வசூல் ரீதியாகவும் விமர்சனர்கள் வட்டத்திலும் பெரிய பாராட்டுக்களை பெற்ற இந்த படம் கதாநாயகி அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ‘மைனா’ படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது அமலா பால் இல்லை என்கிற விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

முதலில் அந்த படத்தில் நடிக்க இருந்தது அனன்யா. அப்போது நாடோடிகள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சமயம். அதனால் தலைகணத்தில் இருந்த அனன்யா பிரபுசாலமன் ‘மைனா’ படத்தின் கதையை சொன்னபோது கண்டுகொள்ளவில்லையாம்.

சமீபத்தில் இதுதொடர்பாக ஒரு நேர்காணலில் பிரபுசாலமன் குறிப்பிட்டு பேசியுள்ளார். அனன்யாவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அவர், மேக்க-அப் இல்லாமல் இருந்த அமலா பாலை பார்த்தவுடன் அவரை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அமலா பால் முன்னனி நடிகையாக உயர்ந்தார்.

From Around the web