10 மாதங்களாக பைக் டூரிங் செய்த அஜித் எத்தனை இடங்களுக்கு சென்றார் தெரியுமா..?

 
பைக் டூரிங் செய்த அஜித்

கடந்த சில மாதங்களாக தன்னுடைய சூப்பர் பைக்கில் டூரிங் செய்து வந்த அஜித், நாட்டில் எத்தனை பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார் என்கிற விபரம் தெரியவந்துள்ளது.

வலிமை படத்தை முடித்த கையுடன் ஷூட்டிங் நடந்து வந்த ரஷ்யாவில் சில பகுதிகளுக்கு பைக்கில் டூரிங் சென்றார். அந்த பயணத்தில் அவர் பயன்படுத்தி பைக், அஜித்தின் சொந்த வாகனம் என்பது தெரியவந்தது.

அதையடுத்து இந்தியாவுக்கு திரும்பிய அவர், வட இந்தியாவின் பகுதிகளுக்கு பைக் டூரிங்கை தொடர்ந்தார். ஆன்-ரோடு, ஆஃப் ரோடு, பாலைவனம் போன்ற பல்வேறு பிரதேசங்களுக்கு அவர் டூர் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

சுமார் 10 மாதங்களாக, மூன்று கட்டங்களாக இந்த பைக் டூரிங்கை செய்து வந்துள்ளார் அஜித். இதில் வாகா, அட்டாரி, ஜெய்ப்பூர், ஆக்ரா, சிக்கிம், பூடான், லக்னோ, ஹைதராபாத், வாரணாசி என நாட்டின் அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் பைக்கிலே சென்று வந்துள்ளார்.

தற்போது வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. அது முடிவதற்கு சில மாதங்கள் உள்ளன. அதற்கு பிறகு படம் 2022, ஜனவரி 14-ம் தேதி வெளிவருகிறது. அதை தொடர்ந்து சர்வதேசளவில் சில நாடுகளுக்கு டூரிங் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளார்.
 

From Around the web