ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

 
1

மலையாள திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் பிரித்விராஜ். இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் தான் ஆடு ஜீவிதம்.

பிளஸ்ஸி இயக்கத்தில் பார்த்து பார்த்து உருவான இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்து நடிக்க இவர்களுடன் பல முன்னணி இப்படத்தில் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது . அதன்படி ஆடு ஜீவிதம் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுமட்டுமின்றி இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் நிச்சியம் பல மடங்கு அதிகாரம் என எதிர்பார்க்கப்படுகிறது.நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் திரைக்கு வந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுவருவதால் படக்குழு செலிபிரேஷன் மோடில் உள்ளனர்.

From Around the web