3 நாட்களில் அந்தகன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசாந்த் நீண்ட நெடு வருடங்களுக்கு பின் ஹீரோவாக நடித்துள்ள படமே அந்தகன் . தியாகராஜன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த் , சிம்ரன் , யோகிபாபு , சமுத்திரக்கனி , ஊர்வசி , கே.எஸ்.ரவிகுமார் , வனிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்துள்ளனர்.
ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 9ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இப்படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் நாளில் இருந்தே படத்தின் விமர்சனங்கள் நல்ல முறையில் வருவதால் படத்தின் வசூலும் கணிசமாக உயர்ந்துள்ளது . அதன்படி இப்படம் வெளியாகி 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.இப்படம் மொத்தமாக ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.