பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

 
1

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 100 ஆவது நாள் முடிவில், இதன்  வெற்றியாளரை கமல்ஹாசன் அறிவித்தார். அதில் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்த vj அர்ச்சனா இதன் டைட்டிலை வென்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன், விசித்ரா, பூர்ணிமா, அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி சந்திரா என 23 பேர் கலந்து கொண்டனர்.இதில் டைட்டில் வின்னராக அர்ச்சனா பிக் பாஸ் கோப்பையை தட்டித் தூக்கியுள்ளார். இவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக 28வது நாளில் உள்ளே சென்றார்.

மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் வாங்கிய சம்பள விபரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது  ரூ.50 லட்சம் ரொக்க பரிசும், மற்றும்  ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் அத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கு  ஒரு நாளுக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் அர்ச்சனாவிற்குக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். ஆதலால் 77 நாட்களுக்கு 20 ஆயிரம் வீதம் ரூ. 15,40,000 சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி பரிசுத் தொகை, கார் என பரிசுகளை அள்ளியுள்ளார். ஒட்டுமொத்தமாக வெறும் 77 நாட்களுக்கு இவ்வளவு பரிசுகளை பெற்று உச்சத்திற்கு சென்றுள்ளார்.

From Around the web