பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய RJ ஆனந்திக்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

 
1

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 60 நாட்களை கடந்த நிலையில் கடந்த வாரம் தான் டபுள் எபிக்ஷனை வைத்து விஜய் சேதுபதி டுவிஸ்ட் ஒன்றை கொடுத்து இருந்தார். அதிலும் சாச்சனா, ஆர். ஜே ஆனந்தியை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இது போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் எதிர்பாராத ஒரு சம்பவமாக காணப்பட்டது.

இந்த எலிமினேஷனில் யார் வெளியேறுவார்கள் என கேட்டதற்கு ராஜன் அல்லது சத்யாவின் பெயர்கள்தான் அதிகமாக அடிபட்டது. ஆனால் அதில் ஒருவர் கூட ஆனந்தியின் பெயரையோ சாச்சனாவின் பெயரையோ சொல்லவில்லை.

இவ்வாறு ஆர்.ஜே ஆனந்தி வெளியேறும் காரணத்தினால் அவரின்  நெருங்கிய தோழிகளான பவித்ராவும் அன்சிதாவும் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். ஆனாலும் ஆனந்தி போகும்போது மிகவும் மகிழ்ச்சியாக சக போட்டியாளருக்கு அட்வைஸ் பண்ணி விட்டு சென்றார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஆனந்தி வாங்கிய சம்பளம்  குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு ஒரு எபிசோடுக்கு 25000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

 அதன்படி அவர் 63 நாட்கள் இருந்ததற்கு அவருக்கு 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் எலிமினேட் ஆன போட்டியாளர்களுள் ஆனந்திக்குத்தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

From Around the web