சீரியலில் ஆதி குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 
1

தமிழின் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர், பெரியவர்கள் மட்டுமன்றி இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான தொடராகும். சமூகத்தில் பெண்கள் மீது இருக்கும் முரணான கருத்துகளை உடைக்கும் வகையிலும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் இந்த தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்து வந்த நிலையில் அவரது மறைவிற்குப் பிறகு தற்போது வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.

மாரிமுத்து அளவிற்கு வேல ராமமூர்த்தியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றால் மாரிமுத்துவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.வேல ராமமூர்த்தி, 10 நாட்களுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னர் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவிற்கு ஒரு நாளைக்கு ரூ.15 முதல் 20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

 ஆனால் இது குறித்து சன் டிவி தரப்பில் இருந்தோ அல்லது வேல ராமமூர்த்தி தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேல ராமமூர்த்தி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். சினிமா மிது இருந்த அதீத ஆர்வம் காரணமாக இவர், திரைத்துறைக்குள் நுழைந்தார். ஆரம்பங்களில் நாவல்களையும் திரைக்கதைகளையும் எழுதிய இவர், பின்னர் மெதுமெதுவாக குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். இவர் முதன் முதலில் நடித்த படம், 2008ஆம் ஆண்டில் வெளியான ஆயுதம் செய்வோம் திரைப்படம்தான். அதை தொடர்ந்து மதயானை கூட்டம், கொம்பன், ரஜினி முருகன், சேதுபதி, பாயும் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் நடித்து வரும் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கும் மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் இது நடிகர் மாரிமுத்துவிற்கு கிடைத்த அளவிற்கு கிடைத்த ஆதரவு இல்லை என்றும் பேசப்படுகிறது. 

From Around the web