பாபநாசம் படத்தின் இளைய மகளாக நடித்தவர் தற்போது எப்படி இருக்காங்க தெரியுமா ?

 
1

குழந்தை நட்சத்திரமாக பல மலையாள திரைப்படங்களில் நடித்தவர் எஸ்தர் அனில். இவர் கமல்ஹாசன், கௌதமி நடித்த ’பாபநாசம்’ என்ற திரைப்படத்தில் கமல் மகளாக நடித்திருப்பார் என்பது தெரிந்தது.

எஸ்தர் அனில் ‘பாபநாசம்’ படத்தின் ஒரிஜினல் படமான ’த்ரிஷ்யம்’ படத்தின் அனைத்து பாகங்களிலும் மோகன்லால் மகளாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் எஸ்தர் அனில் சில படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எஸ்தர் அனில் கடலில் உள்பகுதிக்கு சென்று சுறா மீன்களோடு மீன்களாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

From Around the web