வெங்கட் பிரபுவுக்கு ஜோடியான ஸ்நேகா- எந்த படத்தில் தெரியுமா..?
Sep 17, 2021, 21:13 IST

நடிகை ஸ்நேகா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ள தகவல் தெரியவந்துள்ளது.
பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான ’கல்யாண சமையல் சாதம்’ என்கிற படத்தை தயாரித்தவர் அருண் வைத்தியநாதன். இவர் ஏற்கனவே ஸ்நேகா, பிரசன்னா நடிப்பில் வெளியான ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, நிபுணன் போன்ற படங்களை இயக்கி கவனமீர்த்துள்ளார்.
தற்போது இவர் இயக்கும் மற்றொரு படம் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகிறது. இதற்கு ‘ஷாட் பூட் 3’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல வீணைக் இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்தியா இசையமைப்பாளராக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வெங்கட் பிரபு மற்றும் ஸ்நேகா இருவரும் கணவன் மனைவியாக நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.