பட்டுப் புடவையை பிரபலங்களுக்கு பரிசளித்து வரும் கங்கனா- எதற்கு தெரியுமா...?

 
கங்கனா ரணாவத்
தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முக்கிய பெண் ஆளுமை பலருக்கு நடிகை கங்கனா காஞ்சிபுரம் பட்டுப்புடவையை பரிசளித்து வருகிறார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகியுள்ளது. இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாராகியுள்ள இப்படம், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி வெளிவருகிறது. அதை முன்னிட்டு தென்னிந்தியாவில் இருக்கும் முக்கிய நடிகைகள் பலருக்கு காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளை பரிசளித்து வருகிறார் கங்கனா.

பரிசாக கொடுக்கப்படும் புடவையுடன் ஒரு வாழ்த்து மடலும் இடம்பெற்றுள்ளது. அதில், உங்களிடம் இருக்கும் தலைவியை கொண்டாடுவோம். உண்மையான தலைவி ஜெயலலிதாவின் அபிமான காஞ்சிபுரம் பட்டுப் புடவையை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி என்கிற வாசம் இடம்பெற்றுள்ளது.

From Around the web