ஷ்ரேயா கோஷலின் குழந்தை பெயர் தெரியுமா..? இதோ அவரே வெளியிட்ட அறிவிப்பு..!

 
குடும்பத்துடன் ஸ்ரேயா கோஷல்

நாடு முழுவதும் கொண்டாடப்படும் பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷால் தன்னுடைய மகனுக்கு பெயர் சூட்டி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து திரைத்துறைகளிலும் கொண்டாடப்படும் பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். இவருக்கு மும்பையைச் சேர்ந்த ஷிலாதித்யாவுடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

கடந்தாண்டு தான் கருவுற்று இருக்கும் செய்தியை அறிவித்த ஸ்ரேயா கோஷல் மற்றும் ஷிலாதித்யா தம்பதிகளுக்கு கடந்த மே 22-ம் தேதி மும்பையில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மகனுக்கு பெயர் வைத்து உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் ஸ்ரேயா.

அதன்படி ஸ்ரேயா தன்னுடைய மகனுக்கு தேவ்யான் என்று பெயர் சூட்டியுள்ளார். திரையுலகில் ஸ்ரேயா அறிமுகமான போது அவர் சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கிய ‘தேவ்தாஸ்’ படத்தில் முதன்முதலாக பாடினார். அவருடைய முதல் பாடலே அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

 அதன் நினைவாக தன்னுடைய மகனுக்கு தேவ்யான் என்று பெயர் சூட்டியுள்ளார் ஸ்ரேயா. மேலும் அந்த பதிவில், ஒருவிதமான அன்பினால் எங்கள் (கணவரையும் சேர்த்து) உள்ளம் நிரம்பிவிட்டது. இதை ஒரு பெற்றோர்களால் மட்டுமே உணர முடியும். இந்த நிமிடம் இன்னும் கனவு போலவே தெரிகிறது. கணவர் மற்றும் வாழ்க்கையின் இந்த அழகான பரிசுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்று பதிவில் ஸ்ரேயா கோஷால் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web