நடிகர் கிங் காங் மகளின் +2 மதிப்பெண் எவ்வளவு தெரியுமா ?

 
1

வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகர் கிங் காங். தற்போது பெரிய அளவில் படங்களை தலை காட்டாமல் இருந்து வருகிறார்.நடிகர் கிங் காங் மகளும் இந்த முறை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார். இவரது மூத்த மகள் சக்தி பிரியா பிளஸ் டூ தேர்வு எழுதி இருந்த நிலையில் தற்போது அவரது மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 600க்கு 404 மதிப்பெண் எடுத்துள்ளார்.

இதனால் நெகிழ்ச்சி அடைந்த கிங் காங் எங்களது மகள் பெருமை சேர்த்துள்ளார். அவளுக்கு பிடித்த படிப்பை படிக்க வைத்து அவளது கனவை நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் கிங்காங் தன்னுடைய மகனோடு கலந்து கொண்டு விளையாடி இருந்தார். அதுபோல சில மாதங்களுக்கு முன்பு கிங்காங்கின் மகள் தன்னுடைய அப்பாவோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தபோது நான் எங்கள் அப்பாவை டாடு என்று தான் கூப்பிடுவேன். அதோடு என்னுடைய நண்பர்கள் எல்லாம் என்னை பார்க்க வருகிறார்களோ இல்லையோ எங்க அப்பாவை பார்க்க தான் வருகிறார்கள்.என்னைக்குமே எங்க அப்பா குள்ளமாக இருக்கிறாரே என்று நான் நினைத்து வருத்தப்பட்டது கூட கிடையாது. அவர் இப்படி இருப்பது தான் எங்களுக்கு ரொம்ப புடிச்சி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல நடிகர் கிங்காங்கிற்க்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருந்தார்கள்.

From Around the web