புஷ்பாவில் கைகோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்- என்ன கதாபாத்திரம் தெரியுமா..? 
 

 
புஷ்பாவில் கைகோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்- என்ன கதாபாத்திரம் தெரியுமா..?

தமிழில் பல்வேறு முக்கிய படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகரின் படத்தில் நடிக்க புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் க.பெ. ரணசிங்கம். அதுவும் ஓடிடி-யில் தான் வெளியானது. இந்த படத்தில் அவருடைய நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தாலும், ஒட்டுமொத்த பெயரையும் படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி எடுத்துக் கொண்டார்.

இன்றைய காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாவுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடிப்பில் தமிழில் 5 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் தயாராகி வருகின்றன. அதில் பலரும் எதிர்பார்த்து வரும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக் மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களும் அடங்கும்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில் இருவரும் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் இந்தியிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் தங்கையாக வில்லனுடன் சரிநிகராக நின்று மோதும் அதிகாரமிக்க எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்தை விட, ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் படத்தில் வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From Around the web