தெலுங்கிற்கு பிறகு கன்னடத்திலும் உருவாகும் த்ரிஷ்யம் 2- யாரு இயக்குநர்ன்னு தெரியுமா.?

 
தெலுங்கிற்கு பிறகு கன்னடத்திலும் உருவாகும் த்ரிஷ்யம் 2- யாரு இயக்குநர்ன்னு தெரியுமா.?

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற த்ரிஷ்யம் 2 படம் அதே பெயரில் தெலுங்கில் உருவாக்கப்படும் நிலையில், கன்னடத்திலும்  ரீமேக் செய்யப்படவுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷயம் முதல் பாகம் சிறப்பான வெற்றி பெற்றது. அப்போது அந்த படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் உட்பட இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியிலும் த்ரிஷ்யம் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் த்ரிஷய்ம் படத்தின் இரண்டாவது பாகம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியானது. இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டுதல்களை தெரிவித்தனர். உடனடியாக இந்த படத்திற்கான ரீமேக் உரிமையை தெலுங்கு சினிமா நடிகர் வெங்கடேஷ் கைப்பற்றினார். மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் தான் தெலுங்கிலும் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் த்ரிஷ்யம் 2 கன்னடத்திலும் ரீமேக் செய்யப்படுகிறது. த்ரிஷ்யா 2 என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தை பி. வாசு இயக்குகிறார். முன்னதாக இதனுடைய முதல் பாகத்தையும் பி. வாசுவே கன்னடத்தில் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர்.

அதன்படி த்ரிஷ்யா முதல் பாகத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அவர்களுடன் பிரபு, ஆஷா சரத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தற்போது இதே கூட்டணி த்ரிஷ்யா 2விலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web