லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ படத்தில் தலைவர் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா..?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 171வது படமாக உருவாகி வரும் கூலி படத்தில் பிரபல தென்னிந்திய நடிகரான சத்யராஜ் இணைந்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் . இவரது இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படமே கூலி.
இந்நிலையில் லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் கம்போவில் உருவாகும் இந்த படம் எந்த கதையம்சம் கொண்டதாக இருக்கும் லோகேஷின் கடந்த படங்களை போல இந்த படத்திலும் ஏரளமான சண்டை காட்சிகள் இருக்குமா என்ற ஆர்வம் இப்போதிலிருந்தே ரசிகர்கள் மனதில் அழுத்தமாக எழுந்துள்ளது.
நாட்கள் கடகடவென நகர கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது கூலி படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் குறித்த விவரங்கள் படிப்படியாக வெளியாகி வருகிறது .
அதன்படி தற்போது கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது .இப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் பெயர் தேவா என சூட்டப்பட்டுள்ள நிலையில் தளபதி பட பாணியின் லோகேஷ் செய்கை செய்ய போகிறாரோ என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே இப்படத்தில் நாகர்ஜுனா , சவுபின் ஷாயிரின் , ஸ்ருதிஹாசன் , ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் இணைந்துள்ள நிலையில் இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் நடிக்க போகிறார்கள் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
Superstar @rajinikanth sir as #Deva in #Coolie 💥💥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 2, 2024
Thank you so much for this @rajinikanth sir 🤗❤️
It’s going to be a blast 🔥🔥@anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @sunpictures @PraveenRaja_Off pic.twitter.com/TJxsgGdFfI