என்ன காரணம் தெரியுமா? ஒரு வாரம் மீனவ பெண்களுடன் தங்கும் கீர்த்தி சுரேஷ்!
Aug 25, 2023, 07:05 IST

’கார்த்திகேயா 2’ படத்தின் இயக்குனர் சந்து மொன்டேட்டி இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் நாகசைதன்யா நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் மீனவர்கள் வாழ்க்கை பின்னணியை கொண்டு உருவாக்கப்பட உள்ளது. இதற்காக இயக்குனர் மற்றும் படக்குழுவினர் மீனவர்கள் வாழும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து திரைக்கதை அமைத்து வருகின்றனர்.
இந்த படத்தில் நாயகிக்கு மிக அழுத்தமான கேரக்டர் இருப்பதால் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனை அடுத்து அவர் மீனவ பெண்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை ஒரு வாரம் மீனவ பெண்களுடன் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் தனது கேரக்டர் மிக இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் கூறியதை ஒப்புக்கொண்டு மீனவ பெண்களுடன் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.