பாண்டிச்சேரியில் முகாமிட்டுள்ள சமந்தா- காரணம் தெரியுமா..?

 
சமந்தா
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பாண்டிச்சேரிக்கு வந்தடைந்துள்ளார். அதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.

தெலுங்கில் தயாராகும் ‘சகுந்தலம்’ படத்தில் சமந்தா நடித்து முடித்துவிட்டார். அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிப்பதற்காக பாண்டிச்சேரிக்கு வந்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார். நயன்தாரா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ என்கிற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சகுந்தலா’ படத்தில் சமந்தா நடித்து முடித்துவிட்டார். இந்த படத்தில் தேவ் மோகன் கதாநாயகனாக நடிக்கிறார். வரலாற்றுப் படமாக தயாராகி வரும் இப்படத்துக்கு விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web