இந்தியன் 2 படத்தின் ரன் டைம் எவ்வளவு தெரியுமா ?

 
1

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன் . இப்படத்தின் அட்டகாச வெற்றிக்கு பின் கடந்த 2019ஆம் ஆண்டு இப்படத்தின் 2 ஆம் பாகம் பூஜையுடன் தயாராக ஆரம்பித்தது .

இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டானது . இப்படத்தில் முதன்முறையாக ஷங்கருடன் இணைந்து அனிருத் இசையமைத்துள்ளார்.

என்னதான் பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்டாலும் இந்த படத்திற்கு அடி மேல் அடி விழ படம் நடுக்குமா என்ற அளவுக்கு ஏகப்பட்ட இன்னல்களை இந்த இப்படம் சந்தித்தது .

இதையடுத்து பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து தற்போது ஒருவழியாக அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது .

இந்நிலையில் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு யு/ஆ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முழு நீளம் 3 மணிநேரம் என தணிக்கை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

From Around the web