இது தெரியுமா ? கமல், ரஜினி போல ட்ராக்கை மாற்றிய நடிகர் சிரஞ்சீவி..!
சமீப காலமாக சிரஞ்சீவி நடித்த ’சைர நரசிம்மரெட்டி’, ‘ஆச்சார்யா’, ’காட்பாதர்’, ’வால்டர் வீரய்யா’, ’போலோ சங்கர்’ ஆகிய படங்கள் வசூலில் திருப்தியாக இல்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’மெகா 157’ என்ற திரைப்படத்தின் இயக்குனர் வசிஷ்டா சமீபத்தில் பேட்டி அளித்த போது ’இனிமேல் சிரஞ்சீவி முதிர்ச்சியான கேரக்டர்களில் மட்டும் நடிப்பார் என்பதும் குறிப்பாக கமல்ஹாசன் ’விக்ரம்’ படத்திலும், ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ படத்திலும் நடித்தது போல் படங்களில் ரொமான்ஸ் இல்லாமல், வயதுக்கேற்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் முதல் கட்டமாக ’மெகா 157’ படத்தில் அவர் வயதான அதே நேரத்தில் ரொமான்ஸ் இல்லாமல் ஆக்சனுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட உள்ளது. இந்த படத்தின் மூலம் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிரஞ்சீவியை வேற தோற்றத்தில் பார்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.