இது தெரியுமா ? ஆசை படம் வெளியான அதே நாளில் உயிரிழந்த நடிகர் மாரிமுத்து..!

 
1

எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து நேற்று உயிரிழந்தார். இதனிடையே மாரிமுத்து – SJ சூர்யா இடையே நட்பு ஏற்பட காரணமாக இருந்த ஆசை திரைப்படம் வெளியான அதேநாளில், அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் ஆசை திரைப்படம் 1995ம் ஆண்டு வெளியானது. வசந்த் இயக்கிய இந்தப் படத்தில் SJ சூர்யாவும் மாரிமுத்துவும் உதவி இயக்குநர்களாக வேலை பார்த்தனர்.

அப்போது முதல் SJ சூர்யா, மாரிமுத்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1995 செப்டம்பர் 8ம் தேதி ஆசை திரைப்படம் வெளியாகி, நேற்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதேநாளில் அப்படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த மாரிமுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது ஆசை படத்தில் அஜித்தும் சுவலட்சுமியும் நடித்த ஒரு காட்சியின் பின்னணியில் ஆங்கிலோ இந்தியன் பாட்டி ஒருவரை நிற்க வைத்திருந்தார்களாம். மீண்டும் ஒருமுறை அந்த காட்சியை எடுக்க வேண்டும் என மாரிமுத்துவிடம் இயக்குநர் வசந்த் கூறியுள்ளார். அதனால், அந்த பாட்டியை தேடி பிடித்து கூட்டி வரச் சொல்லியிருந்தாராம். ஆனால், மாரிமுத்து அந்த பாட்டி இறந்துவிட்டதாக பொய்சொல்லிவிட்டு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். மாரிமுத்து சொன்னதை உண்மை என நம்பிய வசந்த் மறுநாள் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார்.

அப்போது அந்த பாட்டி எதார்த்தமாக வந்து இயக்குநர் வசந்துக்கு வணக்கம் கூறியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியான மாரிமுத்து, வசந்திடம் போய் உண்மையை சொல்லிவிட்டாராம். இந்தச் சம்பவத்தை எப்போதுமே மறக்க முடியாது என SJ சூர்யா விழுந்து விழுந்து சிரித்தது வைரலாகியிருந்தது. ஆசை படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான இந்த சம்பவத்தை மாரிமுத்து ரசிகர்கள் இப்போது நினைவுகூர்ந்து வருகின்றனர்.

From Around the web