இது தெரியுமா ? ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனின் திருமண அழைப்பிதழை திருப்பி அனுப்பிய பிரபல நடிகர்..! 

 
1

 கடந்த 2007ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சன்  நடிகை ஐஸ்வர்யா ராய்  திருமணம் செய்து கொண்டார்கள். மும்பை ஜுஹு பகுதியில் இருக்கும் அமிதாப் பச்சனின் பங்களாவில் தான் அவர்களின் திருமணம் நடந்தது.அந்த திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலரும் மட்டுமே கலந்து கொண்டார்கள். இதனால் திருமணத்திற்கு அழைக்க முடியாமல் போனதை சரிகட்ட திரையுலகை சேர்ந்தவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸும், பத்திரிகையும் அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் யாருக்கு வேண்டும் உங்கள் ஸ்வீட் பாக்ஸ் என அதை ஒரேயொருவர் மட்டும் திருப்பி அனுப்பி வைத்தார். அவர் தான் பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹா.அமிதாப் பச்சனுடன் சேர்ந்து சில படங்களில் நடித்த சத்ருகன் சின்ஹா போய் இப்படி செய்துவிட்டாரே என திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தார்கள். இது குறித்து பேட்டி ஒன்றில் சத்ருகன் சின்ஹா கூறியதாவது,

திருமணத்திற்கே அழைக்கவில்லை. இதில் ஸ்வீட்ஸ் எதற்கு?. ஸ்வீட்டை அனுப்பி வைக்கும் முன்பு அமிதாப் பச்சனோ அல்லது அவர் குடும்பத்தார் யாராவதோ எனக்கு போன் செய்திருக்கலாம். அதுவே செய்யாதபோது ஸ்வீட்ஸ் எதற்கு என்றார்.

பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சனிடம் அந்த ஸ்வீட் பாக்ஸ் பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அபிஷேக் பச்சன் கூறியதாவது,

என் பாட்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால் தான் என் திருமணத்திற்கு யாரையும் அழைக்காமல் வீட்டிலேயே நடத்தினோம்.பாட்டிக்கு உடம்புக்கு சரியில்லை அதனால் பெரிய கொண்டாட்டம் வேண்டாம் என்றார் அப்பா. அது போன்ற நேரத்தில் நானோ என் குடும்பத்தாரோ எப்படி அழைக்க முடியும்?. ஆனால் எங்கள் இருவரின் பெற்றோரும் அனைவரின் ஆசியை எதிர்பார்த்து கார்டு அனுப்பினார்கள். எல்லோரும் அதை பெற்றுத் கொண்டார்கள். ஒரேயொருவரை தவிர. அவர் மட்டும் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார். சத்ருகன் சின்ஹா அங்கிள் தான் கார்டை திருப்பி அனுப்பியது. அது பரவாயில்லை. அனைவரையும் சந்தோஷப்படுத்த முடியாது என்றார்.

From Around the web