இது தெரியுமா ? தனுஷின் சகோதரி கணவர் ராயன் படத்தில் நடித்துள்ளார்...! 

 
1

செல்வராகவன் தனுஷை வைத்து காதல் கண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் தனுஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறு தனுஷ் தற்போது உச்சத்தில் இருந்தாலும் அவர் வணங்கும் குருவாக அவருடைய அண்ணன் செல்வராகவனும் தந்தை கஸ்தூரி ராஜாவையும் தான் கூறுவார். தனுஷின் ஆரம்பகால தோற்றத்திற்கு அதிக விமர்சனங்கள் குவிந்தது. ஆனால் அவை எல்லாம் கடந்து அவருக்கு பக்கபலமாக அவரது குடும்பம் காணப்படுகின்றது.

தனுஷ் சினிமா துறையில் மட்டுமின்றி தன்னுடைய சொந்த வாழ்க்கையில் எத்தனை பிரச்சனையை சந்தித்தாலும் அவரைத் தேற்றிக் கொண்டு வருவது தனுஷின் அம்மாவும் அவருடைய சகோதரிகளும் தான்.

இந்த நிலையில், தனுஷின் சகோதரி கார்த்திகாவின் கணவர் ராயன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இது தொடர்பில் சில புகைப்படங்களை வெளியிட்ட அவரது சகோதரி, தான் மிகவும் பெருமை கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

குறித்த பதிவில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த புகைப்படங்களை பதிவிடவும் எனது மகிழ்ச்சியை எனது இன்ஸ்டா  குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளவும் காத்திருந்தேன். டாக்டர் கார்த்திக் ஆஞ்சநேயர் அனைவராலும் நன்கு அறியப்பட்ட இருதய நோய் நிபுணர் என்பது யாவரும் அறிந்தது. அவர் தனது மருத்துவ திறமை மற்றும் நிர்வாகத்திற்காக அறியப்படுபவர். ஆனால் தனது சகோதரியின் ஐம்பதாவது படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று என் அண்ணனிடம் இருந்து எனக்கு செய்தி கிடைத்தபோது அவர் எப்படி நடித்திருப்பார் என்று கேட்டேன்.

ஆனாலும் அவரது நடிப்பை பார்க்க ஆர்வமாக இருந்தேன். அதுவும் ஒரு நல்ல கேரக்டரில் அஞ்சி ஒரு நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கு என்னுடைய அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. நான் மகிழ்ச்சியாக சகோதரியாகவும் மகிழ்ச்சியான மனைவியாகவும் உணர்கின்றேன். அனைத்திற்கும் ராயன் குழுவிற்கு நன்றி உங்கள் நிர்பந்தனை ஆற்ற அன்புக்கும் ஆதவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

From Around the web