இது தெரியுமா ? யூடியூப்பில் ஹேராம் படம் செய்த புதிய சாதனை..!

1
கமல்ஹாசன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த படம் ஹேராம் . ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இளையராஜா இசையமைத்த இந்தப் படம் 2000ம் ஆண்டு வெளியானது. கமலுடன் ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், நஸ்ருதின் ஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கமல்ஹாசன் கேரியரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹேராம், திரையரங்குகளில் வெளியானபோது மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. மேக்கிங், கமல்ஹாசனின் நடிப்பு, இளையராஜாவின் இசை என படத்தில் பல விஷயங்களும் ரசிகர்களை கவர்ந்தன. ஆனாலும் இந்தப் படம் வணிக ரீதியாகவும் கமலுக்கு ரொம்பவே நஷ்டமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. அதேநேரம், மகாநதி, குணா, ஆளவந்தான் வரிசையில் ஹேராம் படத்தையும் சினிமா விமர்சகர்கள் கொண்டாடினர்.

CINEMA NEWS

“யூடியூப்பில் கமல் நடித்த ஹேராம் படம் செய்த புதிய சாதனை! அதனால் கமல் எடுத்த முடிவு!”

By

Published on August 31, 2023

உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல், தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை எடுத்துள்ளார். அவைகளில் மிக முக்கியமானது கமல்ஹாசன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த ஹேராம் திரைப்படம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இளையராஜா இசையமைத்த இந்தப் படம் 2000ம் ஆண்டு வெளியானது. கமலுடன் ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், நஸ்ருதின் ஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கமல்ஹாசன் கேரியரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹேராம், திரையரங்குகளில் வெளியானபோது மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. மேக்கிங், கமல்ஹாசனின் நடிப்பு, இளையராஜாவின் இசை என படத்தில் பல விஷயங்களும் ரசிகர்களை கவர்ந்தன. ஆனாலும் இந்தப் படம் வணிக ரீதியாகவும் கமலுக்கு ரொம்பவே நஷ்டமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. அதேநேரம், மகாநதி, குணா, ஆளவந்தான் வரிசையில் ஹேராம் படத்தையும் சினிமா விமர்சகர்கள் கொண்டாடினர்.

மகாத்மா காந்தியின் படுகொலையை பின்னணியாக வைத்து ஹேராம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டது. ஆகஸ்ட் 16ம் தேதி முதல் யூடியூப்பில் ஸ்ட்ரீமிங் ஆகும் ஹேராம் படத்தை இதுவரை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு யூடியூப்பில் வெளியான ஒரு படம், ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளில் ரிலீஸான நேரத்தில் மிக மோசமான தோல்வியை தழுவிய ஹேராம், இப்படியொரு சாதனையை நிகழ்த்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ச்சியாக மேலும் பலர் ஹேராம் படத்தை யூடியூப்பில் பார்த்து வருகின்றனர். இதனால், இந்தப் படத்தை தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்ய கமல் முடிவு செய்துள்ளாராம்.இந்த முறை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் கன்ஃபார்ம் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கமல்.

From Around the web